22 16
இலங்கைசெய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜா வழக்கு தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்

Share

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, இன்று (27.05.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மரியராஜ் சிந்துஜா என்பவர், கடந்த வருடம், 28.07.2024 அன்று வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் தொடரப்பட்ட இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையில், மன்னார் பொலிஸாரினால் வைத்தியசாலையில் சம்பவம் நிகழ்ந்த போது கடமையில் இருந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17.06.2025 அன்று முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 17.06.2025 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...