உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலையொட்டி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் இன்று காலை 8 45 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, பேராயரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பிரார்த்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்ட விசேட பிரார்த்தனை நிகழ்வு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அருட்தந்தைகள், மகா சங்கத்தினர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, பேராயரின் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதேவேளை, தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
#SriLankaNews
Leave a comment