கையெழுத்து விவகாரம்! – CID சென்றார் தயாசிறி

WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM

தனது கையெழுத்தை சிலர் போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து சி.ஐ.டியில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி முறைப்பாடு செய்துள்ளார்.

கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவலையில் இம்​முறை சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தின் கீழ் போட்டியிடவில்லை. ஆனால், சிலர் எனது கையெழுத்தையிட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் எனவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், கையெழுத்தையிட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்து சி.​ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version