8 29
இலங்கை

சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

Share

சீகிரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா(Sigiriya) பாறைக் கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

சீகிரியா பாறைக் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இரவில் பார்வையிட முடியும் என தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களை பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீகிரியா பாறைக் கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இரவில் ஒளிரும் சீகிரியாவின் படமும் போலியானது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

MediaFile 3 2
இலங்கைசெய்திகள்

வாழைச்சேனைப் பகுதியில் தொலைபேசிக் கம்பம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன!

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில்...

MediaFile 2 3
இலங்கைசெய்திகள்

சேதமடைந்த தொலைத்தொடர்பு வயர்களைச் சேதப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் – பொலிஸார் எச்சரிக்கை!

சமீபத்தில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகச் சில பகுதிகளில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு வயர்களுக்குச் சேதம் விளைவித்தல்...

image 870x 692a964e1fc08
இலங்கைசெய்திகள்

மோசமான வானிலை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு – 192 பேர் காணாமல் போயுள்ளனர்!

நாட்டில் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக...