பெப்ரவரி அமர்வுகளில் கலந்துகொள்ளாதவர்களில் சித்தருக்கும் இடம்!

siththar

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் இடம்பிடித்துள்ளார்.

8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெப்ரவரி மாதத்தில் ஒருமுறைகூட கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அடங்குகின்றனர்.

இவர்களில் இரா.சம்பந்தன் மூப்பு நிலை காரணமாகக் கலந்துகொள்ளவில்லை. ஆனால், தர்மலிங்கம் சித்தார்த்தன் எதற்காகக் கலந்துகொள்ளவில்லை என்று அவருக்கு வாக்களித்த மக்கள் தம்மைத்தாமே கேள்வி எழுப்பி விசனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், அமைச்சர்களான திலும் அமுனுகம, காமினி லொக்குகே ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, ரொஷான் ரணசிங்க, ஜயந்த வீரசிங்க, திரான அலஸ் ஆகியோரும் பெப்ரவரி மாதம் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version