24 660111922cf40
இலங்கைசெய்திகள்

சுகாதார சேவையின் நவீன மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல் அவசியம்

Share

சுகாதார சேவையின் நவீன மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல் அவசியம்

நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்துவது அசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற “தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு” என்ற தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் காலனித்துவக் காலத்திலிருந்து இலவச மருத்துவ முறைமை காணப்படுகிறது.

அதனை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், அந்தக் கடந்த கால அனுபவங்களுடன் நாட்டில் தரமான மற்றும் உயர்தர சுகாதார சேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எதிர்வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் இந்தப் புதிய மாற்றங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிப்பதற்காக சுகாதாரத்துறையிலுள்ள அனைவருடனும் பரந்த உரையாடலை நடத்த எதிர்பார்க்கின்றோம்.

மேலும், அதற்கான யோசனைகளையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றேன்.இந்தக் கலந்துரையாடல்கள் அனைத்தையும் அரசியல்மயப்படுத்தாமல் தர்க்க ரீதியாக மேற்கொள்வது முக்கியம்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...