24 10
இலங்கைசெய்திகள்

அதிகாலைவேளை பயங்கரம் : பெண்ணை மோதி கொல்ல வந்த காரால் பரபரப்பு

Share

அதிகாலைவேளை பயங்கரம் : பெண்ணை மோதி கொல்ல வந்த காரால் பரபரப்பு

பெண்ணொருவரை மோத வந்த கார்மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தியபோதிலும் அந்தக்கார் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுவலை காவல் நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இன்று(10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் கடுவலை காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து தான் மோட்டார் சைக்கிளில் வருவதாகவும், தன்னை காரொன்று விபத்தை ஏற்படுத்தி கொல்வதற்காக பின்தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய உடனடியாக செயற்பட்ட காவல் நிலையத்தின் இரவுக் கடமைக்குப் பொறுப்பான அதிகாரியும் பிரதான வாயிலில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரும் வீதிக்கு வந்து தயாராக இருந்த நிலையில், மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் அதிவேகமாகப் பின்தொடர்ந்து வந்த காரை நிறுத்த முற்பட்டனர்.

எனினும் காரின் சாரதி காவல்துறை அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போதும், கார் தப்பிச் சென்றுள்ளது.

தற்போது, ​​குறித்த 38 வயதுடைய பெண், காவல்துறை பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் மற்றும் சாரதியை கைது செய்ய விசாரணை குழுக்கள் ஈடுபட்டுள்ளன .

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...