மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு!

Kerosene

கண்டி மாவட்டத்தில் தற்போது மண்ணெண்ணெய் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய கிரியெல்ல, பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் பெறுவதற்கு வழியில்லாததுடன், கண்டியில் கறுப்புச் சந்தையில் கூட மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டதாக சுட்டிக்காட்டினார்.

இப்பிரச்சினைகளால் சிறு வணிகர்களும், பொது மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் கூட்டிக்காட்டினார்.

எனவே இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு பிரதமரிடமும் அரசாங்கத்திடமும் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version