24 65ff88bd0f57b
இலங்கைசெய்திகள்

பாரிய அளவில் அதிகரிக்கவுள்ள தேங்காய் விலை

Share

பாரிய அளவில் அதிகரிக்கவுள்ள தேங்காய் விலை

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் அறுவடை செய்கின்ற தேங்காயில் ஒரு பங்கு மாத்திரமே தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இனி வரும் மாதங்களில் முற்றாக தேங்காய் இல்லாத நிலை காணப்படும் எனவும் தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்கம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்கள் மற்றும் தென்னை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெண் ஈ தாக்கம் காரணமாக பலரது தோட்டங்களிலுள்ள வெண் ஈ தாக்கப்பட்ட மரங்களில் சிறு குரும்பைகூட இல்லாமல் வெறுமனே நோய் தாக்கம் ஏற்படுத்தப்பட்ட மரமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னை பயிர்செய்கையாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...