பாணந்துறை தெற்கு, வேகட பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு, பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகும் என்று தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையின் உரிமையாளர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் அவரது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

