பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு!

1665580302 1665576397 shoot L

அஹுங்கல்ல நகரில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இருந்த நபர் ஒருவரை குறிவைத்து காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, காயமடைந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் சில நிமிடங்கள் பிரதான சாலையில் போராடி, பின்னர் அவரது பிடியில் இருந்து தப்பினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version