மட்டக்களப்ப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தற்கொலை எண்ணிக்கைகள்!
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்ப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தற்கொலை எண்ணிக்கைகள்!

Share

மட்டக்களப்ப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தற்கொலை எண்ணிக்கைகள்!

மட்டக்களப்பு வெல்லாஅவளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜூலை மாதம் முதல் நேற்று வரை 8 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

அதன்படி மண்டூர் பிரதேசத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதுடன் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேச கடலில் 64 வயதுடைய ஆண் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி தொடக்கம் ஜூன் 30 வரையிலான 6 மாத காலப்பகுதியில் 18 வயதுக்கு உட்பட்ட 3 பெண்கள் ஒரு ஆண் உட்பட 4 சிறுவர்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 61 ஆண்கள் 14 பெண்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 9 பேரும், மட்டக்களப்பு பொலிஸ் பரிவில் 10 பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 10 பேரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 13 பேரும், தற்கொலை செய்துள்ளனர்.

அத்துடன் இந்த ஜூலை முதலாம் திகதி தொடக்கம் நேற்று 29 ம் திகதி வரையிலான காலப்பகுதில் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 18 வயதுக்கு உட்பட்ட 11 ஆண்கள் 4 பெண்கள் உட்பட 15 சிறுவர்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 113 ஆண்களும் 20 பெண்கள் உட்பட ஒருவருடத்தில் 133 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டின் புள்ளி விபரத்தையும் இந்த ஆண்டு 6 மாத புள்ளி விபரத்தை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 6 மாதத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளமை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய புள்ளிவிபரம் காட்டுகின்றது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...