வடமராட்சியில் திடீரென தோன்றிய சிவலிங்கம்!!

siva

சிவராத்திரி நாளான நேற்று (19) சனிக்கிழமை, நாட்டிலுள்ள பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில், யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி – முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சிவராத்திரி விரதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. எனினும், குறித்த சிவலிங்கம் வெள்ளிக்கிழமை இரவு பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதி ஊடாகப் பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்துக்குப் பூ வைத்து, கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர்.

#SriLankaNews

Exit mobile version