இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும், முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவும் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சங்கமிக்கவுள்ளனர்.
சந்திரிக்கா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல் நாளை வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள இதற்கான நிகழ்வில், முன்னாள் பிரதம நீதியரசர் தலைமை உரை ஆற்றவுள்ளார்.
#SrilankaNews