24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு!! ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி
இலங்கைசெய்திகள்

24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு!! ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி

Share

24 மணிநேரத்தில் ஏழு சிறுமிகள் வன்புணர்வு!! ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்களே இவ்வாறு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 24 மணிநேரங்களில் 7 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு துன்புறுத்தல் அல்லது வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள் 14, 15, 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் 17-18 வயதுடைய சிறார்கள் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதிவாகியுள்ள ஏழு சம்பவங்களில் நான்கு சம்பவங்கள் கட்டாயப்படுத்தப்பட்டவை எனவும் மேலும் மூன்று சம்பவங்கள் காதல் உறவுகளால் ஏற்பட்டவை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பூஜாபிட்டிய, மருதானை, கொட்டவெஹெர, தும்மலசூரிய, பதவிய, மிட்டியகொட, யடவத்த ஆகிய இடங்களில் இருந்து இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...