2019 நவம்பர் மாதத்துக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியும், டலஸ் ஆதரவு அணியும் இணைந்தே சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
அத்துடன், இது தொடர்பான ஆவணம் சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 35 எம்.பிக்கள் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
#SriLankaNews