நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்கவுக்குச் சொந்தமான பாணந்துறை வீடு, சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை ஹொரண பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews

