கொழும்பில் தீவிர பாதுகாப்பு!

download 4 1 15

கொழும்பிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அவற்றை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஹோட்டல்களின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் சுற்றுலா விடுதிகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சுற்றுலா விடுதிகளின் பாதுகாப்பு பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், தற்போது சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பாதுகாப்புச் சிக்கல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

#srilankaNews

Exit mobile version