தொடர் ராஜினாமாக்கள்! – திண்டாடும் அரசு

gotabaya rajapaksa 1

அரசிலிருந்து மேலும் சில அமைச்சர்கள் வெளியேறவுள்ளனர் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, பதவி விலகியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” நிமல் லான்சாவின் வெளியேற்றமானது, சாதாரண சம்பவம் அல்ல, அரசில் இருந்து பெருமளவானோர் வெளியேறவுள்ளனர் என்பதற்கான ஆரம்பக்கட்ட சமிக்ஞையே அது.

அரசுமீது பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் விரைவில் வெளியேறுவார்கள்.

இந்த அரசால் நடத்தப்படுகின்ற சர்வக்கட்சி மாநாடென்பது , ஏமாற்று அரசியலின் ஓர் அங்கமாகும்.” – என்றும் கம்மன்பில குறிப்பிட்டார் .

#SriLankaNews

Exit mobile version