தமிழ் எம்பிக்களை சந்தித்த அண்ணாமலை

24 668ba6fbbe1a9

தமிழ் எம்பிக்களை சந்தித்த அண்ணாமலை

இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை (K. Annamalai) இலங்கை தமிழ் எம்பிக்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சந்திப்பானது, நேற்று (07) திருகோணமலையில் (Trincomalee) உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அவர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் (S. Sritharan) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்கால அரசியல் கள நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Exit mobile version