தமிழர்கள் இன்றும் அடிமைகளாக தான் : கஜேந்திரன்
இலங்கையை ஆளுகின்ற பௌத்த பேரினவாதம்தான் தமிழர்களை இன்றும் அடிமைகளாக வைத்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழர்கள் பௌத்த பேரினவாதத்திற்குள்ளும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள்ளும் சிக்குண்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மற்றும் என் மீது மேற்கொண்ட தாக்குதல் இதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.