rtjy 195 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழரின் போராட்டம்!! ஐ.நா சபையிலிருந்து பின்வழியால் வெளியேறிய ரணில்

Share

புலம்பெயர் தமிழரின் போராட்டம்!! ஐ.நா சபையிலிருந்து பின்வழியால் வெளியேறிய ரணில்

நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக ஐ.நா சபையை விட்டு ரணில் பின்வழியால் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பதை எதிர்க்கும் விதமாக ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு தலைமை தாங்கிய உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில்,

நிரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும் கூறியது மட்டுமல்ல இலங்கையின் உண்மைக்கும், நீதிக்குமான ஆணைக்குழு தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டம் இது.

மேலும் பெளத்த மயமாக்கல் , சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றில் ஐ. நா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராட்டத்தின் போது, “தியாகி திலீபனின் ஊர்தியை சிங்கக் கொடி கொண்டு அடித்து நொருக்கிய சிங்கள பெளத்த இனவெறி அரசு வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? ரணில் ஐ.நாவுக்கு வருவது ஐ.நாவுக்கு அவமானம், இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து” போன்ற கோசங்கள் மக்களால் எழுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...