2 9
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்காது : முன்னாள் தமிழ் எம்.பி பகிரங்கம்

Share

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்காது : முன்னாள் தமிழ் எம்.பி பகிரங்கம்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்துவிடும் என்கிற நம்பிக்கை தனக்கில்லையென ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

மன்னாரில் (Mannar) இன்று (7) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கட்டமைப்பு சார்பாக சங்குச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுகின்றோம். வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், வேட்பாளர்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

அம்பாறை மற்றும் திருகோணமலை (Trincomalee) பிரதேசங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளோம்.

தென்பகுதி மக்கள் அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழலுக்கு எதிராக ஜே.வி.பி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தற்போது ஜே.வி.பி உடன் இணைந்து போட்டியிடுவதில் எமது இளைஞர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. அவர்கள் தற்போது தேர்தல் ஆசனங்களை கூடுதலாக கைப்பற்ற வேண்டும் என்று சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

அந்த வகையில் எமது இனப்பிரச்சினையாக இருக்கலாம், எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற விடயங்களாக இருக்கலாம், கடந்த காலங்களில் அனுபவித்த துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத எமது தேசத்தை அனுபவிக்கின்ற நிலைப்பாடுகளை இந்த ஜே.வி.பி அரசாங்கம் நிறுத்துமா? என்கிற கேள்வி இருக்கிறது.“ என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...