செல்வச்சந்நிதி ஆலய ஆற்றங்கரையில் இரும்பு வேலி

IMG 20220904 WA0085

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆற்றங்கரையில் அடியவர்கள் பாதுகாப்பாக நீராடும் பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை தரிசிக்க நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகைதரும் நிலையில் ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆற்றில் முதலைகளிடம் இருந்து பாதுகாப்பாக நீராடும் பொருட்டு இந்த இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அடியவர்கள் பயமின்றி நீராடலாம் என்றும் ஆற்றில் உள்ள முதலைகளை பாதுகாப்பாக வெளியேற்றவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டதால் அதில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் நேற்று அறிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version