ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 39 கிலோ ஹொரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
46 வயதுடைய தாயும், 22 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
#SriLankaNews