ரணிலுக்கு பாதுகாப்பு! – சபாநாயகரிடம் கோரிக்கை

ranil wickremesinghe

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன, சபாநாயகரிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, தனது வீட்டை சுற்றி வளைப்பதற்கு சிலர் அழைப்பு விடுத்துள்ளனர். இதில் இராசமாணிக்கமும் ஒருவர் என சுட்டிக்காட்டிருந்தார்.

ரணிலின் உரையை தொடர்ந்து கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன,

” முன்னாள் பிரதமர், தனது பாதுகாப்பு தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தார். எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகருக்குதான் பொறுப்புள்ளது. எனவே , இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கையை எடுக்கவும். ” என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

Exit mobile version