நல்லூர் செல்வா வீதிப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பு இன்று காலை வெடித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பொலிஸ் உத்தியோகத்தராக கடமைபுரியும் மகன் விடுமுறையில் நேற்றிரவு வீட்டிற்கு வந்தவேளை தாயார் அவருக்கு உணவு சமைத்துவிட்டு அடுப்பினை அணைத்துவிட்டு வெளியே வந்தார்.
சிறிது நேரத்தில் சமையலறையில் பாரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்று பார்த்தபோது எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறி காணப்பட்டுள்ளது. எனினும் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெடிப்பு சம்பவம் நல்லூர் பகுதியில் பதிவான இரண்டாவது வெடிப்பு சம்பவமாகும்.
#SrilankaNews