அரிசி பதுக்கி வைத்த களஞ்சியசாலைகளுக்கு ‘சீல்’!!

Tamil News large 252415620200420041947

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தலைமையிலான குழுவால் நேற்றுமுன்தினம் (25) சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, பொலநறுவை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட நெல் களஞ்சியசாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.

அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடத்திச்செல்லப்பட்ட சுமார் 20 களஞ்சியசாலைகள் இன்று சுற்றிவளைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

சவளக்கடை பகுதியிலுள்ள பாரிய நெல் களஞ்சியசாலையொன்றும் இதில் அடங்குகின்றது.

பியர் உற்பத்திக்காக சுமார் 30 லட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட சுற்றிவளைப்பு குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version