25 683909359e026
இலங்கைசெய்திகள்

ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து மாணவனை தள்ளிவிட்ட நபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Share

16 வயது பாடசாலை மாணவனை, ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து தள்ளிவிட்டு, அவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ், சந்தேக நபரை கொலைக் குற்றவாளி என அறிவித்து, நேற்று அவருக்கு மரண தண்டனையை விதித்துள்ளார்.

2014 ஏப்ரல் 9 ஆம் திகதியன்று, பசறை பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட ரத்நாயக்க முதியான்செலாகே ஹீன்பண்டா என்பவரே, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சம்பவத்தின்போது, மாணவரான பிரான்சிஸ் சுதர்சன் என்பவரை, ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து தள்ளிவிட்டதால் அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தின்போது குற்றம் சுமத்தப்பட்டவர் மதுபோதையில் இருந்தார் என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...