நாளை சனிக்கிழமை பதில் பாடசாலை நடைபெறும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் இயற்கை இடர் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகளுக்கான பதில் பாடசாலையே சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம்20 ஆம் திகதி முதல் பதில் பாடசாலை நடைபெற்றது. அடுத்த பாடசாலை நாளை நடைபெறும் – என்றார்.
#SriLankaNews