9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

Share

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெவினுவர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார்.

மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் இந்த ஆசிரியை கைது செய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி நன்றாக ஆங்கிலம் கற்றுக் கொண்டதன் காரணமாக ஆசிரியர் மாணவியுடன் நெருங்கிப் பழகி தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் மற்றும் சிறுமியின் வாக்கு மூலம் என்பனவற்றின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, மாத்தறை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஆசிரியர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...