மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றார்கள் எனவும், இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் வேகமாக பாதிக்கப்பட கூடிய சாத்தியபாடுகள் அதிகமாக காணப்படுவதாக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும், பாடசாலைகளில் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றபடாத நிலையே இதற்கான காரணமாகும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஏனெனில், பாடசாலைகளில் கொரோனா தொற்று நீக்கிகளை வாங்குவதற்காக முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை அத்தோடு தமது சொந்த பணத்தில் கொரோனா பரிசோதனை செய்கின்ற நிலையில் ஆசிரிய சமூகம் காணப்படுகின்றது.
ஆகவே பாடசாலைகளில் கொரோனா பாதுகாப்பு குறித்த சுற்றிக்கை வெளியிடப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment