பாடசாலை மாணவர் மீது சரமாரி தாக்குதல்!
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர் மீது சரமாரி தாக்குதல்!

Share

பாடசாலை மாணவர் மீது சரமாரி தாக்குதல்!

கணேமுல்ல பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் தாக்கியதால், மாணவர் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாணவன் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாகவும், நேற்று பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மற்றுமொரு மாணவர் அவரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகனை தலைக்கவசத்தால் நெற்றியிலும் தலையிலும் கடுமையாக தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கணேமுல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த மாணவன் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...