எதிர்வரும் வாரமும் மூன்று நாட்களே பாடசாலை!

piasri fernando

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 5ம் திகதி வரையும் கடந்த வாரம் போலவே வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version