நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை! – கல்வி அமைச்சு அறிவிப்பு

school closed

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (04) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமைவரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுடன் பங்குபற்றலுடன் Zoom ஊடாக இன்று (03) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலை உள்ளிட்ட காரணிகளை கருத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரகாலம் வழங்கப்படும் இந்த விடுமுறை, அடுத்த தவணை விடுமுறையின்போது ஈடுசெய்யப்படும்.

#SriLankaNews

Exit mobile version