tamilnih scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு இன்று முதல் நீண்ட விடுமுறை

Share

பாடசாலைகளுக்கு இன்று முதல் நீண்ட விடுமுறை

பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைந்து பெப்ரவரி முதலாம் திகதி கல்வி ஆரம்பிக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ள உயர்தரப் பரீட்சை காரணமாகவே நீண்ட பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக இந்த நீண்ட பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,298 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...