14 28
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கம்பளை (Gampola) – தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நேற்று (15) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், ”குறித்த பாடசாலை சிறுமியை கடந்த 11 ஆம் திகதி வானில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது.

அதன்படி, தவுலகல காவல் நிலையமும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளின் குழுக்களும் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.

இதன் விளைவாக, இந்தக் கடத்தலில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை 13 ஆம் திகதி அம்பாறை நகரில் காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுமியும் பாதுகாப்பாக​ காவல்துறையினரினால் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (14) சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை காவல்தறையினர் கைது செய்தனர்.

கடத்தலுக்காக சந்தேக நபர்கள் வந்த வானும் காவல்துறையினரினால் கண்டுபிடிக்கப்டபட்ட நிலையில், அதன் சாரதி பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம் குறித்து தவுலகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...