3 56
இலங்கைசெய்திகள்

2024 இற்கான புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு : வெளியான தகவல்

Share

2024 இற்கான புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு : வெளியான தகவல

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (08) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்பயைில், மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்படம்பர் மாதம் 15 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில், பரீட்சைக்கு முன்னர், பகுதி 01 இல் காணப்பட்ட மூன்று வினாக்கள் வெளியானமை தெரியவந்ததையடுத்து பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

இதனால் பெறுபேறுகளை வெளியிட நீதி மன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல் தாளில் இடம்பெற்ற மூன்று வினாக்கள் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், அதற்கான இலவச புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த பரீட்சையில், 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும் 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...