புலமைப்பரிசில் பரீட்சை இன்று

exam Lggfg

2022 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.

இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத் தயார்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட இன்று நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரத்து 894 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன், இந்த வருடம் மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 698 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version