இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச பதவியேற்பு
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக சசீந்திர ராஜபக்ச, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் வீதி விபத்தில் உயிரிழந்த சனத் நிசாந்தவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சுப் பதவி, சசீந்திர ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் சசீந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்வார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சசீந்திர ஏற்கனவே வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.