சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதன் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்ததாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
“எவ்வளவு காலம் ஆலை மூடப்படும் என்று என்னிடம் விசாரித்தபோது, 50 நாட்கள் வரை என்று சொன்னேன். இது 2 நாட்கள், 5 மணிநேரம், 10 நாட்கள் அல்லது 50 நாட்கள் வரை இருக்கலாம். பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம், எனவே ஆலையை மீண்டும் திறப்பதற்கு நாங்கள் முன்முயற்சி எடுத்தோம், ”என கம்மன்பில கூறினார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நீண்டகாலமாக பராமரிக்கப்படாமல் இருப்பது மற்றும் கச்சா எண்ணெய் கிடைக்காதது உள்ளிட்ட பல காரணங்களை கூறி நவம்பர் 15ஆம் தேதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment