சாந்தன் சுகயீனம் அடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மிகப்பெரிய பழிப்பாவத்தை சுமக்க வேண்டிய சூழல் உருவாகப் போகின்றது என்று அரசியல் பிரமுகர்கள் பலராலும் பேசப்பட்ட போதிலும் எவரும் இந்த விவகாரத்தினை முக்கிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த உலகம் நலன் சார்ந்தது அவர் அவர் பிரச்சினையை மாத்திரம் எண்ணி சிந்திக்குமே தவிர பொது நலன் சார்ந்து சிந்திக்காது இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இந்த அடிப்படையிலேயே சாந்தனின் மரணத்தை பார்க்க வேண்டும். சாந்தனின் மரணம் ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு பெரும் துயர் ” என கூறியுள்ளார்.