சமுர்த்தியை அழைத்தது கோபா குழு!

samurdhi logo horizontal edited 850x460 acf cropped 1

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இத்திணைக்களம் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கணக்காய்வாளரின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராயும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் எதிர்வரும் 26ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version