ஆபாச படங்களை அனுப்பி குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி உத்தியோகத்தர்!
இலங்கைசெய்திகள்

ஆபாச படங்களை அனுப்பி குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி உத்தியோகத்தர்!

Share

ஆபாச படங்களை அனுப்பி குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி உத்தியோகத்தர்!

வாட்ஸ்அப் செயலியின் ஊடாக ஆணுறுப்பை குடும்ப பெண்ணிற்கு காட்டி பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புறநகர் பகுதியொன்றில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி வாட்ஸ்அப் செயலி ஊடாக தொடர்ச்சியாக ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு ஒன்று இன்று (07-08-2023) கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன்படி, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐயூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேக நபரான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு பல்வேறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபரை நாளை (08-08-2023) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...