tamilni 313 scaled
இலங்கைசெய்திகள்

விரும்பினால் பேசுங்கள்! சம்பந்தனுக்கு ரணில் பதிலடி

Share

விரும்பினால் பேசுங்கள்! சம்பந்தனுக்கு ரணில் பதிலடி

“எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இரா.சம்பந்தன் கடும் தொனியில் கூறிய இந்த வார்த்தைகளால் சினமுற்ற ஜனாதிபதி ரணில் , ”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்”, என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18.07.2023) மாலை நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை என கூறப்படுகின்றது.

மாறாகத் தாம் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த மனித உரிமைகள் சார் விடயம், காணாமல்போனோர் பணிமனை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகவே விளக்கமளித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசப்படாத நிலையில், சினமுற்ற இரா. சம்பந்தன் எம்.பி., “எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்துப் பேசியுள்ளார்.

சம்பந்தன் கடும் தொனியில் கூறிய இந்த வார்த்தைகளால் சினமுற்ற ஜனாதிபதி ரணில், ”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையேல் நீங்கள் எழுந்து செல்லலாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, ‘என்னால் தரக்கூடியவற்றையே தர முடியும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதானால் நாடாளுமன்றில் 3இல் 2 பெரும்பான்மை அவசியம். அதனை செய்ய எம்மால் முடியாது’, என்றும் அவர் கோபமாகவே பதிலளித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...