பாராளுமன்ற அமர்வுகளில் இன்று முதல் மீண்டும் பங்கேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை சபாநாயகர் இன்று பெயரிடவுள்ளார். இதனையடுத்தே சபை அமர்வில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமது கட்சி உறுப்பினரான மனுஷ நாணயக்காரமீது தாக்குதல் நடத்துவதற்கு முற்பட்ட ஆளுங்கட்சியினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுமே ஐக்கிய மக்கள் சக்தியினர் இரு நாட்கள் சபை அமர்வை புறக்கிணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment