ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையும் சஜித் அணியினர்!

image 9f399caa60

” ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவுள்ளனர்.” – என்று மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

” சர்வக்கட்சி அரசமைக்கும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுவருகின்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனினும், சஜித் பிரேமதாச இழுத்தடிப்பு செய்துவருகின்றார். அவர் அவ்வாறு செயற்பட்டாலும் அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் சர்வக்கட்சி அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

அதுமட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் சஜித் பிரேமதாச இழப்பார். விமல், கம்மன்பில மற்றும் டலஸ் அணிகள் இணைந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றிவிடும்.” – எனவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version