sajith 4
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சித் தலைவர் கூட்டத்தை உடன் கூட்டுங்கள்! – சபாநாயகருக்குச் சஜித் கடிதம்

Share

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் பொருட்டு கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்,

“நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள சவால்மிக்க நிலைமைக்கு அரசமைப்பு நேரடியாகத் தலையிட வேண்டியது அவசியம் என நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். தற்போதைய நிலையில் நாடாளுமன்றத்தில் எடுக்கும் முடிவுகள் குறித்து முழு நாட்டு மக்களும் அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் கோரும் பிரதான மறுசீரமைப்புக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது முக்கியமானது. அத்தோடு, நாட்டினுள் சிறந்த ஆட்சி மற்றும் வெளிப்படையான தீர்மானங்கள் தொடர்பாக அரசமைப்பு மாற்றம் அத்தியாவசியமானதாகும்.

எனவே, அதற்காக தற்போது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்காகக் கட்சித் தலைவர் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு, இக்கூட்டத்திற்கு சட்டமா அதிபர், அத்திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் சட்ட வரைபு திணைக்களத்தின் அதிகாரிகளையும் அழைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நடவடிக்கைகளை மேலும் காலம் தாழ்த்துவதற்கோ அல்லது பேச்சு நடத்திக்கொண்டிருப்பதற்கான காலம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எங்களுடைய நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மதிப்புக்குரிய மாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தொழில்முனைவோர்களான புதிய தலைமுறை இளைஞர், யுவதிகள் என முழு நாட்டு மக்களும் நாட்டுக்காக உடனடியாக எடுக்க வேண்டிய தீர்வுகள் தொடர்பாக நாடாளுமன்றம் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றனர்.

எனவே, தற்போது நீங்கள் எடுக்கும் தீர்மானங்களே எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். இந்தக் கோரிக்கைக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...