sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு இருளில்; மக்களோ வீதியில்! – அரசே கூண்டோடு பதவி விலகு என சஜித் வலியுறுத்து

Share

“நீண்ட நேர மின்தடையால் நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் பற்றாக்குறையாலும் மக்கள் வீதிகளில் அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில், இந்த அரசு இனியும் தாமதிக்காமல் கூண்டோடு பதவி விலகவேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடு தழுவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின்nவிநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அதேவேளை, நாளைமறுதினம் முதல் 15 மணித்தியாலங்கள் மின்விநியோகத் தடையை அமுல்படுத்தும் சாத்தியம் அதிகம் காணப்படுகின்றது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு வரலாறு காணாத நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இந்த அரசே முழுப்பொறுப்பு.

தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் சார்ந்த தீர்வுகள் குறித்து நாம் பல தரப்புடனும் கலந்தாலோசித்து வருகின்றோம்.

இந்த அரசின் ஆட்சி தொடர்ந்தால் இலங்கை மீண்டெழ முடியாது. எனவே, இந்த அரசு கூண்டோடு பதவி விலகவேண்டும். அப்போதுதான் ஆட்சியை நாம் பொறுப்பேற்க முடியும்.

எங்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...