ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணி இன்று பிற்பகல் 2 மணியளவில் கெம்பல்பிட்டியில் ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஆரம்பமான இந்தப் பேரணி பொரளை ஊடாக கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்துள்ளது.
இதனால் பொரளை, வோட் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னிலை சோசலிசக் கட்சியின் மே தினப் பேரணி கொழும்பு – விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
#SriLankaNewsa